வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு பயன்படுத்தி வருகின்றனர். சில முக்கிய தேவைகளுக்கு வங்கி கணக்கு என்பது அவசியமானதாக இருப்பதால் அனைவரிடமும் தற்போது வங்கி கணக்கு உள்ளது. இந்நிலையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்காமலேயே விட்டுவிட்டீர்களா? உங்களுக்கான புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் இந்த பணத்தை வட்டியுடன் பெற முடியும். நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாத உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய பழைய வங்கிக் கணக்கின் பேலன்ஸை https://udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.