தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 7 இன்று கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் பிறகு நவம்பர் 7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாளாகும். மாணவர்களின் விவரங்களை பிழையின்றி திருத்தம் செய்து பதிவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
