பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய் (55) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் KGF படத்தில் காசிம் சாச்சா பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய மறைவு பெரும் சோகம் என்றும், அவருடைய இழப்பு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது என்றும் கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
