பீகார் மாநிலத்தில் ஷிவான் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி என்ற சமீர் பிஹாரி என்பவருக்கு ரூபி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. இவர்கள் அகமதாபாத்தில் உள்ள அகமதி ரோ என்ற பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு இம்ரான் என்ற நபருடன் ரூபிக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் சமீருக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வேறு ஒருவருடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதை அறிந்து ஆத்திரத்தில் அவரை போட்டு அடித்துள்ளார். இதனால் தன் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டிய ரூபி காதலன் இம்ரான் மற்றும் அவரின் இரண்டு நண்பர்களோடு இணைந்து கணவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். கணவன் இறந்த பிறகு அவருடைய உடலை சமையலறை மேடையின் மீதே புதைத்து அதன் மீது சிமெண்ட் போட்டு டைல்ஸ் பதித்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது வெளியூருக்கு வேலைக்கு சென்ற கணவன் திரும்பவே இல்லை என்று கணவன் காணாமல் போய்விட்டதாகவே நாடகமாடியுள்ளார். ஆனால் அதன் பிறகு அதே வீட்டில் தன்னுடைய காதலனுடன் ஓராண்டாக ரூபி வாழ்ந்து வந்துள்ளார். கணவனை புதைத்த இடத்திலேயே கள்ளக்காதலனுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் காணாமல் போன சமீர் பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் இம்ரானை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு போலீசாரை அவரே அழைத்துச் சென்றுள்ளார். சமையலறை தோண்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு, முடி மற்றும் திசுக்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி DNA சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரூபி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ள போலீசார் குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த மேலும் இரண்டு நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
