தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி வார விடுமுறையில் மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஊர்களுக்கு செல்ல சுமார் 1000 சிறப்பு பேருந்துகளை TNSTC அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 7 நாளை முதல் நவம்பர் 9ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் www.tnstc.in என்ற இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
