தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுகவை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். அதற்காக மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பது மட்டுமல்லாமல் கட்சியில் இருக்கும் குறைகளையும் களைத்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் திமுக தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரது பதவியும் பறிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் இன்று ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உட்கட்சி பிரச்சினைகளை ஓரம் கட்டி வைக்க நிர்வாகிகளை எச்சரித்தார். 2026 தேர்தலில் நெல்லையில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும் தோல்வி அடைந்தால் பதவி நிச்சயம் பறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
