2021 இல் கொண்டுவரப்பட்ட தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைக்க ஒன்றிய அரசு கோரிக்கை வைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நான் ஓய்வு பெற்றதற்கு பிறகுதான் சில வழக்குகளை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசு நினைக்கிறதா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
