திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருமணம் ஆகாமல் பெற்றோர் பாதுகாப்பில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் எப்போதும் கணவன் மனைவி இருவரில் ஒருவர் மகளின் பாதுகாப்புக்காக வீட்டில் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் பெண்ணின் தந்தை வேலை காரணமாக வெளியூருக்கு சென்ற நிலையில் தாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் மளிகை பொருட்கள் இல்லாததால் அதை வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்று இருந்தார்.
இதனால் இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ஏலகிரி கிராமம் மூடன் வட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் பிரபு இளம் பெண் வீட்டுக்கு அத்துமீறி நுழைந்து பெண்ணின் கை கால்களை கயிற்றால் கட்டி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி துடித்த நிலையில் உடனே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இளம் பெண்ணிடம் பிரபு அத்து மீறியது தெரிய வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் அவரை பிடித்து நடுத்தெருவில் வைத்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர். பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை சிலர் நாட்டமிட்டு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கைது செய்யப்பட்ட பிரபு முன்னாள் ராணுவ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நாட்களாகவே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நோட்டமிட்டு காத்திருந்து நேற்று முன்தினம் பிரபு இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
