உங்க குழந்தைகளுக்கு வயிற்று வலி, மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா…? இனிமேல் இதை போலோ பண்ணுங்க… ஈஸி டிப்ஸ் இதோ…!!

By Devi Ramu on கார்த்திகை 6, 2025

Spread the love

பெற்றோர் குழந்தைகளுக்கு எவ்வளவு சத்தான உணவுகள் கொடுத்தாலும் அது செரிக்கவில்லை என்றால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படும். எனவே சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் மென்மையானது. எனவே ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட கொடுத்தால் சரியாக செரிமானம் ஆகாது.

ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை சிறிய அளவில் உணவு கொடுப்பது நல்லது. காலை, மதியம், சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு லேசான உணவை என பிரித்து கொடுத்தால் எளிதில் செரிமானம் ஆகும். காய்கறிகள், பருப்பு, பழங்கள், கோதுமை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

   

தயிர், மோர், இட்லி, தோசை போன்ற புரோபயாடிக் உணவுகளும் செரிமான நொதிகளுக்கு உதவி செய்கிறது. இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து எளிதில் உணவு செரிக்க உதவி செய்கிறது. குழந்தைகள் அமைதியான சூழலில் அமர்ந்து மெதுவாக மென்று சாப்பிட பழக வேண்டும். சாப்பிடும் போது டிவி மொபைல் பார்க்க கூடாது.

   

போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக குடித்தால் மலச்சிக்கல் ஏற்படும். வெதுவெதுப்பான நீர் குடிப்பது இன்னும் நன்மை பயக்கும். செரிமானத்திற்கு உடல் செயல்பாடு முக்கியம். குழந்தைகள் தினமும் 30 முதல் 47 நிமிடங்கள் வரை விளையாட வேண்டும். ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நடனம் போன்றவை சுறுசுறுப்பாக்கி உடலுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரித்து உணவு செரிப்பதற்கு உதவி செய்யும்.