இயேசுவுக்கு நன்றி சொன்ன ஜெமிமா ரோட்ரிக்ஸ்… மதத்தை குறிவைத்து வந்த ட்ரோல்… பதிலடி கொடுத்த முன்னாள் இந்திய வீராங்கனை…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

மகளிர் உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கட்டுக்கு 341 ரகளை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி இந்திய அணி வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய ஜெமிமா, நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன்.

இதை நான் தனியாக செய்திருக்க முடியாது. அவர் என்னை வழி நடத்தினார் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து ஜெமிமாவின் மதத்தை குறி வைத்து பல ட்ரோல்கள் வந்தது. இந்த நிலையில் ஜெமிமா மீதான மத ரீதியான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை சிகா பாண்டே பதிலடி கொடுத்துள்ளார் . அதாவது, “ஆமாம் ஜெமிமா கடவுளுக்கு பிடித்த குழந்தைதான் நீங்கள் அதற்காக பொறாமைப்பட்டால் மன்னிக்கவும் யாரும் உங்களுக்கு உதவ முடியாது என்று பதில் அளித்துள்ளார்