வெளியே சொன்னால் ஆபாச படங்களை வெளியிடுவேன்… 7 மாதங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமை… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!

By Soundarya on கார்த்திகை 4, 2025

Spread the love

சமீபகாலமாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுமி ஒருவரை, இளைஞர் ஒருவர் 7 மாதங்களாகவே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர், அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி இந்த கொடுமையைச் செய்துள்ளார். இதன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.