கவலையே வேண்டாம்..! மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த புதிய பயனாளர்களுக்கு குட் நியூஸ் ..!!

By Soundarya on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஜூலை 15 முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் 1,000 வரவு வைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார். ஆனால், இதற்கு  தகுதியானவர்கள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகாததால் பலரும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தகுதியானவர்கள் விவரம் நவ.30-க்குள் தெரிவிக்கப்படும் என உதயநிதி மீண்டும் உறுதியளித்துள்ளார்.