பெரும் சோகம்…! அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

By Soundarya on கார்த்திகை 4, 2025

Spread the love

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி (84) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 2001 முதல் 2009 வரை அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில், துணை அதிபராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தான் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, சதாம் உசேனுக்கு மரண தண்டனை உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்தன. டிக் செனி  அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த துணை அதிபராக கருதப்பட்டவர்.