மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹெர்மன்பிரீத் கவுர் உலக கோப்பையுடன் தூங்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அணிந்திருந்த டி-ஷர்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல அனைவருக்குமான விளையாட்டு என்று எழுதப்பட்டிருந்தது. முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோஹித் ஆகியோர் உலகக் கோப்பையுடன் தூங்கிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram
