கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க பனையூர் தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார்கள். தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேருந்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இதனால், தவெக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
