மாந்தோப்பில் 15 வயது சிறுமி – இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் பிஜினூர் மாவட்டம் டாரா நகர் கிராமத்தை சேர்ந்த நிகில் (19) என்ற இளைஞர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சஞ்சல் என்ற 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வர எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் தங்கள் காதலை கைவிடாமல் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நிகிலும் அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிறகு அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் மாந்தோப்பிற்கு இருவரும் சென்றனர்.

அங்கு காதல் ஜோடி இருவரும் மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் காணாமல் போனது தொடர்பாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். பிறகு இருவருடைய உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.