எங்கள் இதயம் நொறுங்கியது… “இந்த ஒரு இரவுக்காக 45 நாட்கள் தூங்காமல் இருந்தோம்”… உலகக்கோப்பை வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா உருக்கம்..!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நவி மும்பையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் 87 ரண்களும், வந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த வெற்றி இன்னும் எனக்குள் முழுமையாக உள்வாங்க முடியவில்லை. நான் கிரிக்கெட் மைதானத்தில் உணர்ச்சிவசப்பட்டதில்லை. ஆனால் இது நிஜமாகவே ஒரு மிகவும் நம்ப முடியாத தருணமாகும். நம்முடைய சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம். ஒவ்வொரு உலக கோப்பைக்கு நாங்கள் சென்றபோதும் எங்கள் அனைவருக்கும் எத்தனையோ மன வருத்தங்கள் ஏற்பட்டது. பல நேரங்களில் எங்கள் இதயம் நொறுங்கியுள்ளது.

   

கடந்த காலை ஏமாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்புணர்ச்சியாக மாறியது. அந்த அனுபவங்களை நாங்கள் உறுதியாக்கி கொண்டு எங்கள் விளையாட்டை மேம்படுத்த கடுமையாக உழைத்தோம். இந்த ஒரு இரவுக்காக நாங்கள் 45 நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறோம். அணியின் வெற்றி என்பதை தாண்டி மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம். கடந்த ஒன்றரை மாதங்களாக நாங்கள் பெற்ற ஆதரவை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.