முதல் முறையாக மகளிர் உலக கோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி… ஆனந்தக் கண்ணீர் விட்ட ரோஹித் சர்மா…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நவி மும்பையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் 87 ரண்களும், வந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்தப் போட்டியை ரோகித் சர்மா நேரில் கண்டு களித்தார். தென்னாப்பிரிக்க அணியின் இறுதி விக்கெட் இழந்ததும் ரோகித் சர்மா எழுந்து நின்று கைதட்டி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.