“நண்பரின் தங்கையை கிண்டல் செய்த கும்பல்…” உயிர் தப்பிக்க ஓடிய வாலிபர்…. ஓட ஓட விரட்டி கொன்ற மர்ம கும்பல்…. பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் மதுரைமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 19 வயதான மகன் ராஜேஷ் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் வேலை செய்யும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். அவரது நண்பர்களான பிரித்வி, பேரரசு ஆகியோர் ராஜேஷை இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது திடீரென அந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேஷ் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். பிரிதிவி, பேரரசு ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

   

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷ் அவரது நண்பரின் தங்கையை கிண்டல் செய்த கும்பலை தட்டி கேட்டுள்ளார். இதனால் ராஜேஷுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் ராஜேஷை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.