“வீட்டில் தனியாக இருந்த அண்ணி…” சாப்பாடு கேட்டு சென்று அத்துமீறிய ரவுடி…. கோபத்தில் அடித்தே கொன்ற அண்ணன்…. பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜன். பிரபல ரவுடியான ராஜன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜன் வேலைக்கு செல்லாமல் எப்போதும் அம்மன் கோவில் கலையரங்கத்தில் தங்கி இருந்தார். அந்த வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வது, நாகரீகமாக நடந்து கொள்வது என சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று ராஜன் தனது பெரியப்பா மகனான அண்ணன் கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சாப்பாடு கேட்டு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் கோபாலகிருஷ்ணனின் மனைவியிடம் அத்துமீறி நடக்க முயன்றாத தெரிகிறது. இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் மனைவி தனது கணவரிடம் கூறியுள்ளார்.

   

இதனை கேட்டு கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் கலையரங்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ராஜனின் தலையில் கட்டையால் அடித்து, முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.