அடேங்கப்பா…! 50 வினாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா…? ஷாக்கிங் தகவல்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலிக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்துள்ளார்.

நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். படம் மட்டுமில்லாமல் நயன்தாரா விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த தகவலின் படி 50 வினாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.