விஜய்க்கு புதிய சிக்கல்… நாளை பனையூருக்கு நேரில் செல்லும் சிபிஐ… திடீர் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிர படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விசாரித்த அதிகாரிகளின் அடுத்த குறி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் தலைமை அலுவலகம் தான். நாளை அங்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் விஜயும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை விஜய் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.