ஆட்டோவில் வந்து பீர் குடித்து அடாவடி…! “அது தப்பு தான்…” போலீசாரை ஒருமையாக பேசி…! பரபரப்பை கிளப்பிய பெண்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

சென்னை மாவட்டம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். நேற்று ரேவதி தனது மாமா ராஜாவுடன் தி.நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஆட்டோவில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரேவதி பீர் குடித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென ரேவதி ஆட்டோவை நிறுத்துமாறு கூறி பீர் குடித்துக் கொண்டே சத்தமாக பேசியுள்ளார்.

உடனே ஆட்டோ டிரைவர் மேடம் சவாரி செய்த பணத்தை கொடுத்து விடுங்கள். நான் சென்று விடுகிறேன் என பதற்றத்துடன் கூறியுள்ளார். ஆனால் பணம் கொடுக்காமல் ரேவதி ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்து போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றதும் எங்களுக்கு தெரியும் உங்க வேலையை பாருங்க என கூறி இழிவாக பேசியதாக தெரிகிறது. ரேவதி தகராறு செய்ததை போலீசார் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

   

ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ரேவதியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆபாசமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக ரேவதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரேவதியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது போலீசாரை திட்டியது தவறுதான். ஆனால் பெண் என்று கூட பார்க்காமல் என்னை இழிவாக பேசி போலீசார் தக்கினார்கள் என ரேவதி கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறி நீதிபதி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.