நாடு முழுவதும் கட்டண உயர்வு அமல்… பொதுமக்களுக்கு தபால் துறை ஷாக் நியூஸ்…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

நாடு முழுவதும் இந்திய தபால் துறை சேவையை மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மிக விரைவில் எளிதில் சேவையை பெறுவதற்காக தபால் துறை பெறும் உதவியாக உள்ளது. இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை தபால் துறை மூன்று ரூபாய் உயர்த்தியுள்ளது.

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மூன்று முறைக்கு மேல் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறைக்கு மேல் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் தபால் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால் 23 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பணப்பரிவர்த்தனை அல்லாத பிற சேவைகளுக்கு 11 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 1 நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.