“கர்ப்பமாக்கினால் பணம் தருவேன்…” செல்போனில் கெஞ்சிய பெண்…! உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட ஒப்பந்ததாரர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

By Devi Ramu on கார்த்திகை 1, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் பெண் ஒருவர், தன்னை கர்ப்பிணி ஆக்கினால் பணம் தருவதாக குறிப்பிட்டு இருந்ததாக இருந்தார். இதனை பார்த்த ஒப்பந்ததாரர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உல்லாசமாக இருக்க நினைத்தார். அந்த விளம்பரத்தை கிளிக் செய்து செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்ட சிறிது நேரத்தில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் தான் கர்ப்பமாக உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஒப்பந்ததாரர் மெம்பர்ஷிப் கட்டணம், பதிவு கட்டணம் என மொத்தமாக 11 லட்சம் ரூபாய் பணத்தை அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பத்தை அறிந்த ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.