வடசென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரை பகுதியில் இளம் பெண்களின் உடல் கரை ஒதுங்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்கள் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. நான்கு பேரும் கடலில் குளிக்க வந்துள்ளனர்.
அப்போது ஒருவர் ராட்சத அலையில் சிக்கியதால் மற்ற மூன்று பேரும் இளம் பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இதனால் நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். உயிரிழந்த ஷாலினி, தேவகி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் ஷாலினி அரசுக்கு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
