ஆதார் முதல் GST வரை… நாடு முழுவதும் நாளை (நவ..1) முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்… இதோ முழு விவரம்…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி நவம்பர் 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு பல முக்கிய நிதி விதிகள் அமலுக்கு வர உள்ளது. அதில் புதிய வங்கி காப்பாளர் விதிகள், எளிமையான ஆதார் புதுப்பித்தல், எஸ் பி ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றம், யுபிஎஸ் மாற்றம் வரை நீட்டிப்பு மற்றும் புதிய ஜிஎஸ்டி பதிவு முறை என பல அமலுக்கு வருகின்றன. புதிய விதிகளின்படி நவம்பர் 1 முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு சேமிப்பு பொருள்களுக்கு அதிகபட்சமாக நான்கு நபர்களை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இது அவசர நிலைகளில் குடும்பத்தினர் நிதியை எளிதாக அணுகவும் உரிமை தொடர்பான வழக்குகளை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். காப்பாளர் சேர்த்தல் மற்றும் மாற்றம் நடைமுறையையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயணங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது வாலட் டாப் அப் மற்றும் கல்வி கட்டணம் போன்ற பரிவர்த்தனைகளில் ஒரு சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.

   

ஆதார் புதுப்பித்தல் முறையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆவண பதிவேற்றவில்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாக திருத்தும் வசதியை அறிமுகம் செய்கிறது. பயோமெட்ரிக் மாற்றங்களுக்கு மட்டுமே நேரடியாக ஆதார் மையம் செல்ல வேண்டும். புதிய கட்டணங்களின்படி பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தலுக்கு 75 ரூபாயும் பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு 125 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

   

ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம் சிறு வணிகங்களுக்கான புதிய செயல்முறையை எளிதாகும் புதிய ஜிஎஸ்டி பதிவு முறையும் நவம்பர் 1 நாளை முதல் அமலுக்கு வருகின்றது.