திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்த வேலு வெல்டிங் ஒர்க் பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலுவின் மனைவி இளைய மகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டார். 12 வயதுடைய மூத்த மகள் தற்போது அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேலு அடிக்கடி கத்தியை காட்டி மிரட்டி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வேலு தனது மகளை பேருந்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது பேருந்திலேயே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை பார்த்து சக பயணிகள் வேலுவை அடித்து நடுவழியில் இறக்கி விட்டனர். இதனையடுத்து சிறுமியை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்தபோது அவர்களது முகவரி சிறுமிக்கு தெரியவில்லை. இதனால் கிறிஸ்தவ சபையின் காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சிறுமியிடம் விசாரித்த போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வேலுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
