புதுச்சேரி முதலியார் பேட்டை ஜெயம் நகரில் வசித்து வரும் சுரேஸ் என்பவருடைய மனைவி சூர்யா (29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வருட காலமாக மன அழுத்தத்தில் இருந்த சூர்யா, அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் அதற்கான மாத்திரைகளையும் எடுத்துள்ளார். இதனிடையே நேற்று வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா திடீரென்று எழுந்து தன்னுடைய வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து அவர் கீழே குதித்துள்ளார்.
அங்கு உயர் அழுத்த மின் வயர்கள் இருந்ததால் அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சூர்யாவின் உடலை பத்திரமாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாடியிலிருந்து தெரியாமல் தவறி விழுந்தாரா அல்லது மன அழுத்தம் காரணமாக அவரே தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
