2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அன்புமணிக்கு எதிராக பாமகவில் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட தன்னுடைய மகள் ஸ்ரீகாந்தியை, 2026 தேர்தலில் தருமபுரியில் களமிறக்க பாமக தலைவர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ராமதாஸ் உத்தரவின்பேரில், திமுகவுடன் கூட்டணி பேச்சை ஜி.கே.மணி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைந்து, ஐந்து MLA-க்கள் வென்றாலே, கட்சியை தன் பக்கம் தக்க வைத்து விடலாம் என்று அவர் கணக்கு போட்டு இருக்கிறாராம்
