:அய்யோ, என் பொண்ணு போய்ட்டாளே”.. தயவுசெய்து குழந்தைகளுக்கு செல்போன் தராதீங்க… கண்ணீர் விட்டு கதறி அழுத தந்தை… அதிர்ச்சி தரும் பின்னணி…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் இசக்கி பாண்டி என்பவர் வசதியான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெண்ணின் வீட்டார் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பெண்ணின் குடும்பத்தினர் அவரை மேல் படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருந்தாலும் இசக்கி பாண்டியும் அந்த பெண்ணும் செல்போன் மற்றும் சமூக வலைத்தளம் மூலமாக தொடர்ந்து தொடர்பிலிருந்து வந்தனர். இதனிடையே அந்த பெண்ணுக்கு அவருடைய வீட்டில் வேறு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காதலனின் திட்டப்படி அந்தப் பெண் லண்டனில் இருந்து விமான மூலமாக மும்பை வந்து, அங்கிருந்து கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார். அங்கு காத்திருந்த இசக்கி பாண்டியின் உறவினர்கள் காதல் ஜோடியை காரில் கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கோவையில் சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிறகு திருமணத்தை பதிவு செய்ய முயன்ற போது பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

   

பெண்ணின் உறவினர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததால் கோவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் காதல் ஜோடியை அவர்களுடைய சொந்த ஊரான எல்லைக்கு அனுப்பி வைத்தனர். கோவையில் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்ட நிலையில் நேற்று நெல்லையில் அந்த திருமணத்தை பதிவு செய்வதற்காக இசக்கி பாண்டி தன்னுடைய உறவினர்களுடன் சென்றுள்ளார். அங்கு வந்த பெண்ணின் வீட்டார் இசக்கி பாண்டியன் தரப்பினரிடம் சண்டை போட்டனர். இந்த தகராறு மோதலாக மாறியதால் காயம் அடைந்த இசக்கி பாண்டியனின் தந்தை செல்வம் மற்றும் அவருடைய சித்தப்பா மணிகண்டன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

   

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நெல்லையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 18 வயது நிரம்பிய அந்தப் பெண்ணிடம் இசக்கி பாண்டியன் தொடர்ந்து பேசி வந்த நிலையில் 18 வயது முடிந்த மூன்று நாட்களை ஆன நிலையில் அவரை இந்திய வரவழைத்து திருமணம் செய்து கொண்டதாக அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க என அந்த பெண்ணின் தந்தை கண்ணீர் வாழ்க பேசி வெளியிட்டுள்ள வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.