“அன்று வந்த ஆசை….” தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்று கெத்து காட்டிய கலெக்டர்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2025

Spread the love

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியினருக்கு வான்மதி என்ற மகள் உள்ளார். இவர் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் படித்தவர். வான்மதி பள்ளியில் படித்த போது அந்த பள்ளிக்கு கலெக்டரான உதயசந்திரன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அவருக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாக வரவேற்பாளித்தனர். இதனை பார்த்து வியந்த வான்மதிக்கு கலெக்டராக வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது லட்சியத்தை நிறைவேற்ற விடாமுயற்சியுடன் படித்து கலெக்டராக பணியில் சேர்ந்தார்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் வான்மதி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த வான்மதி தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அவருக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பேசிய வான்மதி, ஒரு கலெக்டரை பார்த்து தான் கலெக்டராக வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. விடாமுயற்சியுடன் படித்தால் எந்த உயர் பதவிகளையும் வகிக்கலாம். செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் என வான்மதி கூறியுள்ளார்.