இவ்ளோ திட்டியும் எப்படி சிரிக்கிற…? கண்ணதாசன் கேள்விக்கு கூலாக பதில் சொன்ன எம்.ஜி.ஆர்…. இதை யாரும் எதிர்பார்க்கலையே….!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2025

Spread the love

பிரபல நடிகரான எம்ஜிஆர் நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார். சிறுவயதில் நாடக கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த எம்ஜிஆர் சசி லீலாவதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக அறிமுகமானார்.

நாடோடி மன்னன் திரைப்படத்தை இயக்கி தயாரித்து நடித்து எம்ஜிஆர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கண்ணதாசன் தன்னை பற்றி பேசியது தொடர்பாக எம்ஜிஆர் ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஒருமுறை கண்ணதாசன் என்னை சந்தித்தார். உன்னை இவ்வளவு திட்டி இருக்கிறேன்.

   

ஆனால் நீ என்னை பார்க்கும் போதெல்லாம் எதுவும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. வெளியிலும் என்னைப் பற்றி எதுவும் பேசவில்லை. எப்போதும் சிரிக்கிறாய் என கேட்டார். அதற்கு நான், “நீங்கள் திட்டுவது எல்லாம் நான் மதித்தால் தானே உங்கள் மீது கோபம் வரப்போகிறது என கூறியதாக எம்ஜிஆர் ஜாலியாக கூறியுள்ளார்.