திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் பாபு வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்த இரண்டு பேர் நீண்ட நேரம் அவருடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு நபர் கத்தியால் பாபுவை சரமாரியாக வெட்டி விட்டு மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாபுவை கொலை செய்த வினோத், மோகன் ஆகிய இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்ததும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. வினோத்தின் மனைவி நிவேதாவுடன் பாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த வினோத் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் உறவை தொடர்ந்தனர். இதனால் கோபம் அடைந்த வினோத் தனது நண்பருடன் பாபுவின் கம்பெனிக்கு சென்று அவரை கொலை செய்தது தெரியவந்தது
