தெலுங்கானா அமைச்சரவையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேரவை மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 31ம் தேதி அவர் அமைச்சராக பதவி ஏற்கிறார் என்று கூறப்படுகிறது.
