செல்போனில் நீண்ட நேரம் பேசிய கள்ளக்காதலி… யாரிடம் பேசுகிறாய்..? உல்லாசத்தின்போது வந்த சண்டை… முகமெல்லாம் சிதைக்கப்பட்ட நிலையில்… திருப்பூரே ஆடிப்போன சம்பவம்…!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். 40 வயதான இவர் தனியார் கழிவுநீர் அகற்றும்  லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகிறார். இந்நிலையில் இளங்கோவனுக்குக்கும் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணை இளங்கோவன் தான் குடியிருக்கும் வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆனால் மாது அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இது இளங்கோவிற்க்கு பிடிக்கவில்லை. இதனால் மாதுவுக்கு வேறு யாரிடமும் தொடர்பு இருப்பதாக கூறி இளங்கோவன் வாக்குவாதம் செய்துள்ளார். சம்பவத்தன்று மாதுவை வீட்டிற்கு அழைத்து வந்த இளங்கோவன் தனிமையில் இருந்துள்ளார் .அதன் பிறகு செல்போனில் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு தகராறு செய்ததில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன் வீட்டில் வைத்திருந்த குழவிக்கல்லை எடுத்து பலமுறை குத்தியதில் அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளார். மறுநாள் வந்துபார்த்தபோது மாது பேச்சு மூச்சு என்று கிடந்ததால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளங்கோவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.