தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த வசதி தற்போது மாநில முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நில அளவைக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
