பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா தேஸ்பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரியங்காவின் கணவர் வசி பிரபலங்களின் வீட்டு நிகழ்வுகளில் டிஜேவாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கிறார். மிகப்பெரிய கோடீஸ்வரரான வசியை பணத்திற்காக தான் பிரியங்கா திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு ஊடகத்திடம் பிரியங்கா பேசியதாவது, “என் கணவர் வசி ஒரு இலங்கை தமிழர். அவரது குடும்பம் லண்டனில் உள்ளனர். அங்கு அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவ்வளவுதான். அவரை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டேன் என கூறுகிறார்கள். நான் இத்தனை வருடமாக உழைத்து இருக்கிறேன். என்னிடம் பணம் இருக்காதா? என பதிலடி கொடுத்துள்ளார்.
