உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த ஆஸ் முகமது அன்சாரி என்ற இளைஞருக்கு இதே ஆண்டு ஏப்ரல் மாதம் சானியா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில மாதங்கள் மனைவியுடன் இருந்த அவர் 2:30 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு சொத்து தரகரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் தன்னுடைய மனைவியுடன் வீடியோ கால் பேசியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சண்டையின் உச்சத்தில் அவ்வாறு தனது அறையில் மேல் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மனைவி தன் கணவர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். உடனே சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சவுதியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து சென்று அறையைப் பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தற்போது அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் தற்கொலைக்கு காரணம் என போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில் போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
