ஆதவ் அர்ஜுனா ROCK… புஸ்ஸி ஆனந்த் SHOCK… ஒருத்தர் மட்டும் தானா..? வெளியான தவெகவின் அதிர்ச்சி லிஸ்ட்…!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கலில் இருந்த விஜய் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்து கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து மீண்டும் அரசியல் பணிகளில் களமிறங்கியுள்ளார். அந்தவகையில் தவெகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளது.  அதில் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல் குமார், விஜயலட்சுமி என பட்டியல் நீளுகிறது. இதில் பெரும்பாலும் ஆதவ்வின்  ஆதரவு ஆட்களே உள்ளனர். மாறாக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவான நபர்கள் மொத்தமாக ஓரம்கட்டப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் யாரும் குழுவில் இடம்பெறவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், ஒருவருடைய பெயர் மட்டுமே உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லக்கூடும் என தகவல் பரவி வரும் நிலையில், தவெகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.