பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அவர் கூறியதாவது, தமிழகத்தில் இருந்து தமிழரை பிரதமர் மோடி துணை ஜனாதிபதி ஆக்கியுள்ளார். தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பாஜக சார்பில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உதவி செய்ய தயார் நிலையில் இருக்கிறோம். சார் என்றாலே திமுகவிற்கு அலர்ஜி. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திலிருந்து சார் என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி தான்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது திமுகவினர் சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. கொளத்தூரில் 9 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது நீக்கல் சேர்த்தல் பட்டியலை தமிழக அரசு அதிகாரிகள் தான் செய்யப் போகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கண்டு திமுகவுக்கு பதட்டம் ஏன்? தோல்வியில் பயத்தால் திமுக கூட்டணிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
