தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து அக்டோபர் 31, நவம்பர் ஒன்னு ஆகிய தேதிகளில் 690 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 2 அன்று பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
