ரீல்ஸ் எடுக்கும் போது ஆற்றில் விழுந்த பாஜக MLA…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

தலைநகர் டெல்லியின் பட்பர்பஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது யமுனை ஆற்றங்கரையில் நின்று கொண்டு அவர் வீடியோ எடுக்க முயற்சி செய்தார். ஆற்றங்கரையோரம் நின்று கொண்டிருந்த அவர் திடீரென்று நிலைத்தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரவீந்தரின் ஆதரவாளர்கள் அனைவரும் உடனடியாக ஓடி சென்று அவரை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது