“எதுக்குடா இப்படி குடிச்சு நாசமா போற”… மருமகனை தட்டி கேட்ட மாமியார்… இறுதியில் நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

கான்பூர் தேஹத் மாவட்டம் ஜசாப்பூர் கிராமத்தில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் ரோகினியின் மருமகன் கிருஷ்ணா குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதை மோகினி கண்டித்த போது, ஆத்திரமடைந்த கிருஷ்ணா கம்பால் தாக்கிய நிலையில் அலறி துடித்த மோகினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய குடிப்பழக்கத்தை தட்டி கேட்டதால் ஏற்பட்ட சண்டையில் தன்னுடைய மாமியாரை அடித்துக் கொன்ற பிறகு குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோகினி யின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது சாதாரண தாக்குதல் என்றும் இருவருக்கும் இடையே எந்த ஒரு முன் விரோதமும் இல்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர். குடித்ததால் ஏற்பட்ட கோபத்தில் மகன் இந்த கொலையை செய்து விட்டான் என்று கிருஷ்ணாவின் தந்தை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள கிருஷ்ணாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரு மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.