BIG BREAKING: வேகமெடுக்கும் புயல்… சூறைக்காற்றுடன் கனமழை… தமிழகத்திற்கு அலெர்ட்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

Montha புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வேகம் எடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கு 190 கிலோமீட்டர் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் எதிரொலியால் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.