இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் ஒரு சிறிய விஷயம் நடந்து விட்டால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் விபரீதமான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். மன அழுத்தம் என்பது ஒரு மனிதனை மொத்தமாக அழித்து விடுகிறது. தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்தார். அது அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது. தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை பாதுகாப்பாக இறக்க முயற்சி செய்தனர்.
மின்சாரத்துறை ஊழியர்கள் கிரேன் உதவியுடன் அவரை கீழே இறக்க முயற்சி செய்தபோது அந்த இளைஞர் திடீரென்று அங்கிருந்து குதித்து விட்டார். ஒரு ஊழியர் அவரை பிடிக்க முயற்சி செய்த போதும் அவரிடமிருந்து தப்பித்து சேற்றில் விழுந்தார். இதனால் அவருடைய உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமண ஆசையால் இளைஞர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
హైటెన్షన్ టవర్ పై నుంచి దూకిన వ్యక్తి
క్రేన్ సహాయంతో వ్యక్తిని కిందకు దించడానికి ప్రయత్నిస్తుండగా కిందకు దూకేసిన వ్యక్తి
వ్యక్తికి తీవ్ర గాయాలు.. 108 సహాయంతో స్థానిక ఆసుపత్రికి తరలింపు https://t.co/Jpcszmbyxk pic.twitter.com/SxMjY0aK3c
— ChotaNews App (@ChotaNewsApp) October 27, 2025
