இந்து மதத்தின் புனிதமான வழிபாட்டு முறைகளில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவிப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் எப்போதுமே ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 41 நாட்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இப்படியான நிலையில் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து கொண்டு விரத நியமங்களை மீறி ரகசியமாக மதுபானம் அருந்திய நபர் ஒருவர் செய்த செயல் வீடியோவாக வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர் அறையில் அமர்ந்து பீர் குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று அங்கே பிற ஐயப்ப பக்தர்கள் நுழைகின்றனர்.
அவர்களைப் பார்த்ததும் அவர் பதற்றமடைந்து பீர் பாட்டிலை நாற்காலிக்கு கீழே மறைக்க முயற்சிக்கின்றார். ஆனால் மற்ற பக்தர்கள் அவரை உடனே கட்டுப்படுத்தினர். இப்படி புனிதமான மாலையை அணிந்து குடித்துக் கொண்டிருக்கிறாயே, முடியவில்லை என்றால் மாலையை கழற்றி விட வேண்டும் என்று ஆத்திரமடைந்து பக்தர்கள் சண்டை போடுகின்றனர். இந்த காட்சி தற்போது வீடியோவாக இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
అయ్యప్ప మాలలో ఉంటూ బీర్ తాగిన స్వామి
బీర్ తాగుతుండగా పట్టుకున్న తోటి స్వాములు
సోషల్ మీడియాలో వీడియో వైరల్ pic.twitter.com/BKlLbKMrRc— JP_Journo (@jpjourno9) October 27, 2025
