அகமதாபாத்தில் ஆஷிக் ஹரிபாய் சாவ்டா என்ற நபர் மருத்துவமனையில் தன்னுடைய மகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இந்த நிலையில் மருத்துவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உன்னுடைய மகளுக்கு சிகிச்சை பார்க்க முடியாது என்று கூறி அவருடைய கன்னத்தில் அறைகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்த வீடியோவில் மஞ்சள் நிற குர்தா அணிந்த மருத்துவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த நபர் தொலைபேசியில் அதை வீடியோவாக பதிவு செய்த போது பதட்டம் அடைந்த அந்த மருத்துவர், வீடியோவை நிறுத்துமாறு கேட்கிறார்.
A woman doctor at a hospital in Ahmedabad slapped a man who had come for his daughter's treatment.
She also refused to treat his daughter.
How easy it is for women to slap a man.pic.twitter.com/eFMzDpPzl6
— ︎ ︎venom (@venom1s) October 27, 2025
உன்னுடைய மொபைலை கீழே போடு என்று கேட்கிறார். அப்போது நான் ஏன் நிறுத்த வேண்டும் என்று சாவ்சா கேட்க அந்த மருத்துவர் அவரை நோக்கி நகர்ந்து அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். அங்கு ஒரு பாதுகாப்பு காவலர் இருந்தும் அவர் தலையிடவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மருத்துவரின் நடத்தையை கண்டித்து பலரும் அவரை கைது செய்யவும் மருத்துவ உரிமத்தை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
