கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு நேற்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், நடிகர் விஜய் மிகுந்த வேதனையுடன் மன்னிப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் மக்களின் நீண்டகால தேவைகளை விஜய் கேட்டறிந்ததாகவும் தவெக-வின் துணைப் பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மல் குமார், “உயிரிழந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி கட்டணம் முதல், அவர்களின் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து செலவுகளையும் கழகம் ஏற்கும் என்றார். மேலும், விஜய் விரைவில் தனது பரப்புரையை தொடங்க இருக்கிறார் எனவும் உறுதியளித்துள்ளார்.
