பணத்தால் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா..? 20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்… செம ஷாக்கில் விஜய்…!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இன்று  ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், நடிகர் விஜய் மிகுந்த வேதனையுடன் மன்னிப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.   இந்நிலையில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு தவெக சார்பில் வழங்கப்பட்ட ரூ.20 லட்சத்தை அவரது குடும்பத்தினர் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உயிரிழந்த ரமேஷின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில்  விஜய் நேரில் வரவழைத்து ஆறுதல் கூறியபோது, ரமேஷினுடைய மனைவி அந்த சந்திப்பிற்கு செல்லாத நிலையில், விஜய் நேரில் ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று சொல்லி, 20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், அந்த பணத்தால் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.